கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கல்லூரி வளாகத்தில் உள்ள குறைகளை ‘வாட்ஸ்-அப்'பில் பதிவேற்றக்கூடாது: பணியாளர்களுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை

கல்லூரி வளாகத்தில் உள்ள குறைகளை ‘வாட்ஸ்-அப்'பில் பதிவேற்றக்கூடாது என்று பணியாளர்களுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கல்லூரிக கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) நா.ராமலட்சுமி, அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களின் குறைகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் கல்லூரி வளாகம் மற்றும் அலுவலகத்தில் உள்ள குறைகளை வாட்ஸ்-அப் குழுவில் பதிவேற்றம் செய்யக்கூடாது.

இந்த குறைகள் தொடர்பாக அதைச் சார்ந்த மேல் அலுவலர்களிடம் முறையிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதனை பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு கடைப்பிடிக்காதவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து