தமிழக செய்திகள்

2018-2019-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு - அதிகாரிகள் தகவல்

2018-2019-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

வருமான வரித்துறையில் கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.

அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந் தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வருகிற 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள், கணக்கு தாக்கல் செய்யாதோர், செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு