தமிழக செய்திகள்

புரட்டாசி மாதம் நிறைவு: மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்..!

சென்னை காசிமேட்டில் மீன்வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

விரதத்துக்கு பெயர் போன புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டிருந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று என்பதால் சென்னை காசிமேட்டில் மீன்வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டதால் காசிமேட்டில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

அதைபோல கடலூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

மீன் பிரியர்களின் படையெடுப்பால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் களை கட்டியது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது