தமிழக செய்திகள்

கோத்தகிரி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி நிறைவு

கோத்தகிரி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி நிறைவு

தினத்தந்தி

கோத்தகிரி

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் செயலாக்கம் குறித்து பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து நேற்று முன் தினம் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் ஓவேலி, தேவர்சோலை, நடுவட்டம், சோலூர், கேத்தி உள்ளிட்ட 5 பேரூராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதையடுத்து நேற்று உலிக்கல், ஜெகதளா, அதிகரட்டி, பிக்கட்டி, கீழ் குந்தா ஆகிய 5 பேரூராட்சிகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்