தமிழக செய்திகள்

10, 12 வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புக்கு வரலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 15 - 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில் இவ்வாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடைபெறும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு 1.70 லட்சம் மையங்கள் தேவை. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து