தமிழக செய்திகள்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றிய அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீராமிதுனை கடந்த ஆகஸ்ட் 14 தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு