தமிழக செய்திகள்

ரூ.70 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல்

ரூ.70 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட கீழதிருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் உமாவதி மற்றும் வருவாய்த்துறையினர் திருத்தங்கல் காமராஜர் சிலை அருகில் உள்ள பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 36) என்பவர் தனது வீட்டில் பலதரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய பெட்டிகளை பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் இது குறித்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்