தமிழக செய்திகள்

ரயிலில் கடத்திய கஞ்சா, குட்கா பொருட்கள் பறிமுதல்

எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய கஞ்சா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் ஜார்கண்ட் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரயிலின் முன்பக்க பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து ரயில்வே போலீஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...