தமிழக செய்திகள்

மயிலம் அருகே 75 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது

மயிலம் அருகே 75 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனா.

தினத்தந்தி

மயிலம், 

மயிலம், கூட்டேரிப்பட்டு வார சந்தை அருகே மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாக்குமூட்டைகளுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாவுத் மகன் ஜலால் (வயது 47), மதுராந்தகம் அப்துல் ஹமீது மகன் நாகூர் மீரான் (44) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 75 கிலோ குட்கா இருந்தது. இவற்றை மயிலம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாக ஜலால், நாகூர் மீரான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை