தமிழக செய்திகள்

குட்கா பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது

குட்கா பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது

குழித்துறை, 

மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையில் போலீசார் நேற்று காலையில் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த காரை சோதனையிட்டதில், காருக்குள் 7 சாக்கு மூட்டைளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. அதில் 379 சிறிய பாக்கெட்டுகளில் மொத்தம் 78 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.52 ஆயிரத்து 206 ஆகும். அந்த குட்கா புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் குலசேகரம் கூடை தூக்கி பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கார் உரிமையாளர் முகமது சபீக் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...