தமிழக செய்திகள்

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆற்காடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று ரேஷன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ஆற்காடு மற்றும் விஷாரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் விஷாரம் பகுதியைச் சேர்ந்த அகமது பாஷா (வயது 61) என்பவர் அவரது வீட்டின் அருகில் தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அகமத் பாஷாவை போலீசார் கைது செய்தனர். அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு