தமிழக செய்திகள்

பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பள்ளிபாளையம் பகுதியில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பள்ளிபாளையம்

ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று பள்ளிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது, பள்ளிபாளையம் ஒன்றிய அலுவலகம் பின்புற பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன்அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1,100 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கைது

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில், பள்ளிபாளையத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்த இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்