தமிழக செய்திகள்

துக்க நிகழ்ச்சியில் மோதல்; 2 பேர் மீது வழக்கு

துக்க நிகழ்ச்சியில் மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

தக்கலை அருகே வாழவிளையை சேர்ந்த முதியவர் இரு தினங்களுக்கு முன்பு இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு நடந்ததாகவும், அதை பார்த்த ஊர்தலைவர் ஜெகன் (வயது 38) துக்க வீட்டில் வந்து தகராறு செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.

இதனால் தகராறில் ஈடுபட்டவர்கள் ஊர் தலைவரை தகாத வார்த்தைகளால் பேசினர், இதை தட்டிகேட்ட ராஜேஷ் (39), ராமராஜன் (30) ஆகியோர் தென்னை மட்டையால் தாக்கப்பட்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது, இந்த சம்பவம் தொடர்பாக ஊர் தலைவர் ஜெகன் தக்கலை போலீசில் புகார் செய்தார், அதன்பேரில் ஆசான்கிணறு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40), ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர், ஆனந்த் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து