தமிழக செய்திகள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிட்டது. வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவில் தமிழகம், புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றியை தனதாக்குகிறது.

மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சுமார் 340 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. அதேசமயம், தமிழகத்தில் திமுக கூட்டணியே புதுச்சேரி உட்பட மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகள் முன்னிலை பெற்று வருகிறது. அதேபோல், தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடி ஜி , பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்