தமிழக செய்திகள்

காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும், அங்குள்ள முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை தொகுதி சார்பில் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாநில வக்கீல் அணி இணைத்தலைவர் மகேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதபோல் நெல்லை சட்டமன்ற தொகுதி சார்பில் நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை