தமிழக செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏப்ரல் 3 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வருகை

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏப்ரல் 3 ஆம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஏப்ரல் 6ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3ம் கட்ட பிரசாரத்தை தமிழகத்தில் மேற்கொண்டுள்ளார். அடுத்தகட்டமாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏப்ரல் 3ம்தேதி தமிழகம் வருகிறார்.

ஒருநாள் சுற்றுப்பயணமாக வரும் அவர், ஏப்ரல் 3ம்தேதி காலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை