தமிழக செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தற்போது அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை

தமிழக சட்டச்பை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, வரும் மார்ச் 27ஆம் தேதி(நாளை) கன்னியாகுமரியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து முதல்முறையாக தமிழக பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி வர உள்ளதாக அந்த கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுருந்தது.

இதன்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தற்போது அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்