தமிழக செய்திகள்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழக காங்கிரஸின் தூண் சரிந்துவிட்டது. கொரோனா தொற்றும் என தெரிந்தும் மக்கள் பணியில் வசந்தகுமார் ஈடுபட்டார். வசந்தகுமார் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார். உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்திருக்கிறார் எச்.வசந்தகுமார்.

திமுக எம்.பி, கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எச்.வசந்தகுமாரின் மறைவு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார், பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்.

* பாரிவேந்தர் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அனைவருடனும், மிக மிக எளிமையாக பழகக்கூடியவர் எச்.வசந்தகுமார். அவரது மறைவு மிகப்பெரிய சோகத்தையும் கவலையையும் உண்டாக்கி உள்ளது.

* அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

வசந்தகுமாரை நான் புன்னகை மன்னன் என்றுதான் அழைப்பேன். அவர் முகத்தில் நான் கோபத்தையே பார்த்ததில்லை. இறப்பு செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. காங். எம்.பி. வசந்தகுமார் நட்பிற்கு இலக்கணம்

* அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் செய்தியில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவு அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது.

* காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை மக்களுக்காக உழைத்துக்கொண்டிருந்தார் வசந்தகுமார். ஒரு கடின உழைப்பாளியை நாம் இழந்து விட்டோம். வசந்தகுமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

காங்கிரஸ் எம்.பி.,எச்.வசந்தகுமார் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நல்ல நண்பர். பழகுவதற்கு இனிமையானவர். தொழிலிலும் வெற்றி பெற்று அரசியலிலும் வெற்றி கண்டவர்.

* எம்.பி. வசந்த குமார் மிகவும் எளிமையான மனிதர் - மூத்த பத்திகையாளர் ஷ்யாம்.

* வசந்த குமார், காமராஜர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார் - அப்பாவு, திமுக

* காங்கிரஸ் கட்சி தலைசிறந்த தலைவரை இழந்துள்ளது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

* மிக பெரிய உழைப்பாளி வசந்தகுமார்" - முத்தரசன்

* தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் வசந்த குமார் - சரத்குமார்

* கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

வசந்தகுமார் எம்.பி. மறைவு இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது. குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்புத்தமிழர் காலமாகிவிட்டார். அவர் உழைப்புத்தேனி, ஓயாக்கடல், அடித்தட்டு மக்களின் அன்பர்.
பூமிக்கு வந்துபோன வசந்தமாய் போய்விட்டார். அவர் புகழ் வாழ்க.

* ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பண்பும் அவருக்கே உரித்தான குணநலன்கள்

* மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

நடுத்தர குடும்பங்களின் வலியறிந்து வியாபாரத்தை வளர்த்தவர் வசந்தகுமார். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றி இருந்தோரையும் முன்னேற்றியவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

* திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தொழிலதிபரும், மக்களவை உறுப்பினருமான வசந்த் குமார் காலமானார் என்பது பேரதிர்ச்சியும் பெருங்கவலையும் அளிக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளிப்பவர் எச்.வசந்தகுமார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு ஆகியவற்றின் அடையாளம். வெற்றிவீரருக்கு எமது வீரவணக்கம் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

* திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எச். வசந்தகுமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இயற்கை எய்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், மன வருத்தமும் தருகிறது.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன் விடா முயற்சியாலும், ஓய்வறியா கடும் உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் படிப்படியாக உயர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர மக்கள் பயன் பெறும் விதத்தில் வசந்த் அண்ட் கோ எனும் நிறுவனத்தை தமிழகம் முழுவதும் ஓரு வர்த்தக சாம்ராஜ்யமாக உருவாக்கி உழைப்பில் உயர்ந்தவர்.

வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, எ.வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது துணைவியார், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சகோதரர் குமரிஅனந்தன் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளிட்டோர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.