தமிழக செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தட்டார்மடம்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து, சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ், சாத்தான்குளம் மேற்கு வட்டார தலைவர் சக்திவேல் முருகன், சாத்தான்குளம் தெற்கு வட்டார தலைவர் பிரபு கிருபாகரன், கிழக்கு வட்டார தலைவர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பன்னம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பாஸ்கர், சாத்தான்குளம் நகர காங்கிரஸ் துணைத்தலைவர் கதிர்வேல், சாத்தான்குளம் தெற்கு வட்டார துணை தலைவர் முத்துராஜ், சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர்புளோராராணி, மேற்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் பாலாதினகர், வடக்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் மாரித்தாய், தெற்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் பெல்சியா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் வசுமதி, சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் துணைத்தலைவர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்