தமிழக செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறித்ததை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே உள்ள தேசிய வங்கி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று தேசிய வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையொட்டி அங்கு முன்எச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையிலான போலீசார் காங்கிரஸ் கட்சியினரிடம் வங்கியை முற்றுகையிட முயன்றால் கைது செய்வோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. மாநில பொதுச்செயலாளர் சித்தரஞ்சன், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மைபிரிவு மாவட்ட தலைவர் வாகித்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ராகுல்காந்தி எம்.பி. பதவி பறித்ததை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்