தமிழக செய்திகள்

ஆயக்காரன்புலத்தில், காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிககப்பட்டதை கண்டித்து ஆயக்காரன்புலத்தில், காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வாய்மேடு:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, பிரதமர் மோடி பற்றிய அவதூறு வழக்கில் குஜராத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை கண்டித்து வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆர். செந்தில்குமார், வட்டாரத் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார துணைத் தலைவர் சக்கரபாணி, செயலாளர் ராஜாஜி, நிர்வாகிகள் கணேசன், தேவேந்திரன், பாண்டியன், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை