தமிழக செய்திகள்

ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏப்ரல் 15-ந்தேதி(இன்று) ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து