தமிழக செய்திகள்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

களியக்காவிளையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

களியக்காவிளை, 

களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறிவிட்டதாகவும், அதனை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில முதல்-மந்திரி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பதவி விலக கேட்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசினார். நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜோஸ் லால், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயசிங், மாவட்ட துணைத் தலைவர் பால்மணி, வன்னியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் வன்னியூர் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து