தமிழக செய்திகள்

திங்கள்சந்தையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து திங்கள்சந்தையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்

திங்கள்சந்தை, 

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் திங்கள்சந்தை பஸ் நிலையம் முன்பு வட்டார தலைவர் ஜெயசிங் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. திங்கள்சந்தை காங்கிரஸ் தலைவர் ஜெமினிஷ், வட்டார செயல் தலைவர் வேணுகோபால் போற்றி, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சாமுவேல் சேகர், வட்டார பொருளாளர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். அய்யாதுரை, ஜெபஷீலா, யூசுப் கான், அந்தோணிமுத்து, பீட்டர்தாஸ், விஜிலியுஸ் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். இதில் பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார நிர்வாகிகள் அஸ்வின் ராஜா, ரதீஸ், ரவிகுமார், மனோஜ், பவுல்ராஜ், ஜஸ்டின், அலிஸ்டர், மரியமிக்கேல், சகாயசாந்தி, விவசாய காங்கிரஸ் தலைவர் ஜெயச்சந்திரன், பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பிரகாஷ் தாஸ், ரஜுலின், மனோகரசிங், சுந்தர்ராஜ், கிறிஸ்துராஜ், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.