தமிழக செய்திகள்

ராகுல்காந்தி எம்.பி. கைதை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

ராகுல்காந்தி எம்.பி. கைதை கண்டித்து காங்கிரசார் சார்பில் போராட்டம் போராட்டம் நடத்தப்பட்டது.

தினத்தந்தி

குளச்சல், 

ராகுல்காந்தி எம்.பி. கைதை கண்டித்து காங்கிரசார் சார்பில் போராட்டம் போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அலைக்கழிக்கப்படுவதை கண்டித்தும், இதற்கு எதிராக போராட்டம் நடத்திய ராகுல்காந்தி எம்.பி.யை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் குளச்சல் காமராஜர் சிலை முன்பு நடந்தது. மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமை தாங்கினார்.

நகர தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், கல்லுக்கூட்ட பேரூராட்சி தலைவர் மனோகரசிங், ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்