தமிழக செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

வள்ளியூரில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

தினத்தந்தி

வள்ளியூர்:

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வள்ளியூரில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

வள்ளியூர் அம்பேத்கர் சிலை முன்பிருந்து முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு மெயின் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தை சென்றடைந்தனர். முன்னதாக அம்பேத்கர், காமராஜர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்கதேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில காங்கிரஸ் செயலாளர் ஜோதி, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, வள்ளியூர் யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை