தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தவெகவில் இன்று 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல் கட்ட அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் யாரும் இடம்பெறவில்லை. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் கூறியதாவது:- முதல் பட்டியலில் வரவில்லை. இரண்டாவது பட்டியலில் அரசின் ஒரு அங்கமாக இருப்போம். அதை நடைமுறைப் படுத்த தொடர்ந்து வலியுறுத்துவோம் .
இன்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தவெகவுடனான கூட்டணி உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் எல்லாவற்றிலும் தொடரும் என்று ஏற்கனவே கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். அமைச்சரவையில் எந்த துறை என்பது எங்களின் உயர் மட்ட குழு முடிவு செய்யும். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முன்பாக டி.ஆர்.பாலுவிடம் கார்கே பேசினார். கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினார். அவர்களிடம் பேசி நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.சொல்லாமல் போகவில்லை. சொல்லிவிட்டுதான் வந்தோம்” என்றார்.