தமிழக செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

ராகுல்காந்தி ஜோடோ யாத்திரை ஒரு ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.

தினத்தந்தி

ஓசூர்:-

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்ட 'ஜோடோ யாத்திரை' முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் சிறிய நடைபயணம் மேற்கொள்ள கட்சி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பில் ஓசூரில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ஏரித்தெரு ரவுண்டானா அருகில் இருந்து நடைபயணம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நேதாஜி சாலையில் மாவட்ட கட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. ஓசூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில், மாவட்ட பொருளாளர் மாதேஷ், மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் காளிமுத்து, நாராயணன், ராஜி, வெள்ளைசாமி உள்ளிட்ட ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகளும், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர்கள் சிவப்ப ரெட்டி, கீர்த்தி கணேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அப்துல் ரகுமான் மற்றும் கட்சியினர் திரளாக கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்