தமிழக செய்திகள்

கடலூர் அருகே சுக பிரம்ம மகரிஷி கோவில் கும்பாபிஷேகம்

கடலூர் அருகே சுக பிரம்ம மகரிஷி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

நெல்லிக்குப்பம்

கடலூர் அடுத்த பில்லாலி தொட்டியில் ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, துவார பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடைபெற்றது.

பின்னர் பூர்ணாகுதி நடந்து, யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சுக பிரம்ம மகரிஷி கோவில் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பரிவார மூர்த்திகள் விநாயகர், வள்ளி தேவசேனா, சமேத ஸ்ரீ சக்தி சரவணபவனர், வெங்கடேச பெருமாள் ஆகிய சன்னதியில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்