தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி

திருவள்ளூர் அருகே 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியானார்.

திருவள்ளூர் அடுத்த கனகவள்ளிபுரம் அருகே திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் நேருக்கு நேர் மோதியது. அப்போது காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் ஆவடி அடுத்த வீராபுரம் கன்னிமா நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான சுரேஷ் (44), அவரது மனைவி சுதா (34) மகன் மனோஜ் (15) ஆகியோர் தனது சொந்த ஊரான திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் சுரேஷ் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் கார் டிரைவரான பண்ருட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜான் மரியதாஸ் (வயது 25) காயம் அடைந்தார்.

அவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு வாகனமும் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் வந்தவருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு