தமிழக செய்திகள்

ராமநத்தம் அருகே கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி

ராமநத்தம் அருகே கார் மோதி கட்டிட மேஸ்திரி உயிழந்தா.

தினத்தந்தி

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை என்கின்ற பாண்டியன்(வயது 48), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் வெங்கனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று, பாண்டியன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார், மோட்டார் சைக்கிளை சுமார் 500 மீட்டா தூரத்திற்கு இழுத்து சென்று, சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதற்கிடையே தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை