தமிழக செய்திகள்

நங்கநல்லூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை, நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.67.67 கோடி மதிப்பீட்டில் 12,862 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 7,149 மீட்டர் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா உடனிருந்தனர்.

முன்னதாக சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து காவலர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை