தமிழக செய்திகள்

கண்மாய்கரை பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி

கண்மாய்கரை பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

காரியாபட்டி, 

காரியாபட்டியிலிருந்து கிழவனேரி, வெற்றிலை முருகன்பட்டி, வல்லப்பன்பட்டி வழியாக அல்லாளப்பேரிக்கு அரசு பஸ் சென்று வருகிறது. கிழவனேரி பகுதியில் இருந்து கண்மாய்கரை வரை மழைக்காலங்களில் மண் சரிந்து விழுந்து வருவதால் பஸ் போக்குவரத்து செல்லமுடியாமல் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆதலால் இந்த பகுதி பொதுமக்கள் கிழவனேரி கண்மாய்க்கரை பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் (தங்க தமிழ்வாணன்) நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் செலவில் இந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தடுப்புச்சுவர் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஊராட்சி செயலர் முருகன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், ஒன்றிய பொறியாளர் காஞ்சனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு