தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளி

நாகர்கோவில் கீழராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 67), கட்டிட தொழிலாளி. இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சோந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கடை ஒன்று செட்டிகுளம் பகுதியில் உள்ளது.

இந்த கடையில் உள்ள மாடியில் நேற்று சென்ட்ரிங் பலகையில் ஏறி அப்பாத்துரை கட்டுமான பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பலகை ஈரமாக இருந்தது. அதன் அருகே சென்ற மின்வயர் பலகையில் உரசியதாக தெரிகிறது.

மின்சாரம் தாக்கி பலி

இதனால் அப்பாதுரையை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அப்பாதுரையின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்