தமிழக செய்திகள்

கட்டிட தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

நாகை மாவட்டம் சீர்காழி புத்தூர் வாணியத் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 52). மயிலாடுதுறை கீழையூரை சேர்ந்தவர் சுரேஷ் (26). கட்டிட தொழிலாளர்களான இவர்கள், காரைக்கால் திருவேட்டக்குடியில் உள்ள என்.ஐ.டி. கட்டிட பணிக்காக காரைக்காலில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். நேற்று மதியம் இருவரும் காரைக்காலுக்கு வந்து சாப்பிட்டு விட்டு என்.ஐ.டி. நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அதேபோல் எதிரே காரைக்கால் கீரைத்தோட்டத்தை சேர்ந்த சேகர் (60) என்பவர் தனது மகன் மணிகண்டனுடன், சிறிய சைக்கிள் ஒன்றை மோட்டார் சைக்களில் ஏற்றிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

கட்டிட தொழிலாளி பலி

வரிச்சிக்குடி அருகே இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை