தமிழக செய்திகள்

கட்டிட தொழிலாளி மர்மசாவு

கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசி மேற்கு பகுதியில் உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் சுப்புராஜ் என்கிற தக்காளி (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் சுப்புராஜ் இந்திராநகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்புராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சுப்புராஜ் மனைவி வேலம்மாள் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது