தமிழக செய்திகள்

பள்ளிகள் திறப்பு விவகாரம்: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை

9 முதல் 12ம் வகுப்பு வரை நவ.16 முதல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது

தினத்தந்தி

சென்னை,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்திருந்தார்.

முதல் அமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்