தமிழக செய்திகள்

நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளிடையே பேசினார்கள். அப்போது மாணவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி தெரிந்து கொள்வதின் அவசியம், அதனை பொதுமக்களிடத்தில் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழி வகைகள் பற்றி எடுத்துரைத்தனர். இந்தநிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பச்சமுத்து வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்