தமிழக செய்திகள்

கோர்ட்டு புறக்கணிப்பு

சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி

சங்கராபுரம்

சங்கராபுரம் வக்கீல் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவையும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசுவதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதிவரை 3 நாட்கள் கோட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் நேற்று கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்