சென்னை,
ஆந்திராவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருகிறது.அந்த பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி வெப்பக்காற்று வீசுவதால் பகலில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது.
ஆந்திராவையொட்டி உள்ள ஊத்துக்கோட்டை திருத்தணி, திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம் , ஆவடி, அம்பத்தூர் உள்பட சென்னையிலும் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது.
இது பற்றி வானிலை மைய அதிகாரி கூறுகையில் தமிழகத்தில் தொடர்ந்து அனல் காற்று வீசும் கோடை கால வெப்பம் இந்த ஆண்டு அதிகம் நிலவுவதால் உள் மாவட்டங்களில் மட்டுமே அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்கிறது.
சென்னையை பொறுத் தவரை 4 மாதமாக மழை இல்லாததால் வெப்பக்காற்று அதிகமாகவே காணப்படும். இந்த மாத இறுதி வரை அனல் காற்று வீசும்.
ஜூன் மாதத்தில் தான் ஒரு சில பகுதியில் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடல்காற்று மிக தாமதமாக வீசுவதால் மாலை 6 மணி வரை வெப்பக்காற்று அனலாக கொதிக்கிறது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.