தமிழக செய்திகள்

கனமழையால் தொடர் விடுமுறை: மீண்டும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் வகுப்புகள்...!

தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதி தொடங்கியது. ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை இந்த காலகட்டத்தில்தான் தமிழகம் பெறுகிறது. அந்த வகையில் பருவகாலத்தின் முதல் மழைப்பொழிவு தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த 30-ந்தேதி முதல் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து வருகிறது.

இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, தொடர் விடுமுறை அளிக்கப்படுவதால் பெதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதால் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த தடை இல்லை என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்த சூழலில் இத்தகைய நடைமுறையானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்