கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் காயம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அவ்வப்பேது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்பேது கேடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கெள்ளையர்கள் கெள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்