தமிழக செய்திகள்

தொடர்மழை: மயிலாடுதுறையில் 2வது நாளாக 26 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தொடர்மழை எதிரொலியாக மயிலாடுதுறையில் 2வது நாளாக 26 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தினத்தந்தி

மயிலாடுதுறை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்மழையால் பள்ளிகளுக்கு 2வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மயிலாடுதுறையில் இன்று 2வது நாளாக அனைத்து பள்ளிகளுக்கும் கலெக்டர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

மயிலாடுதுறையில் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார், திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கனமழையால் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து இன்றும் மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த 26 கிராம மீனவர்கள் கடலுக்கு இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு