தமிழக செய்திகள்

தொடர் போராட்டம்: ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமைச்சர் இல்லத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...