தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் தொடர் மழை; சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி

தூத்துக்குடியில் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி,

வடகிழக்கு பருவமழை தொடங்கியபோதும், புரெவி புயலின் போதும் தூத்துக்குடியில் பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்தது. ஆனால் இந்த புயலுக்கு பிறகு தூத்துக்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. நேற்று காலையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வழக்கமாக மழைநீர் தேங்கும் அத்தனை பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது.

ஏற்கனவே, தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு மழை வெள்ளம் தேங்கியதாலும், ஸ்மார்ட்சிட்டி சாலை பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பிரையண்ட்நகர் வழியாக சுற்றி சென்று வருகின்றன. பிரையண்ட்நகர் பகுதியிலும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அதே போன்று தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்