தமிழக செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் ஏறி காண்டிராக்டர் போராட்டம்

டிரான்ஸ்பார்மரில் ஏறி காண்டிராக்டர் போராட்டம் நடத்தினார்.

தினத்தந்தி

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி பாலிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). இவர், மின்வாரிய சப்-காண்டிராக்டர். இவர் தாராபுரம் பகுதியில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க ஒப்பந்தம் எடுத்து இருந்ததாக தெரிகிறது. நேற்று மாலை அந்த மின்கம்பத்தை வேறு ஒரு நபர் மாற்றி அமைத்ததாக தரிகிறது. இதுகுறித்து ராமச்சந்திரன் அதிகாரிகளிடம் கேட்ட போது சரியான பதில் இல்லையாம். இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி அமர்ந்து போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராமச்சந்திரனிடம் போலீசில் புகார் அளிக்கும்படியும், நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் சமாதானம் அடைந்து அங்கிருந்து சென்றார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, நாங்கள் ஒப்பந்ததாரர்கள் வைத்துதான் பணி செய்கிறோம். போராட்டம் நடத்தியவர் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து