தமிழக செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை; இன்று முதல் செயல்படுகிறது

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படுகிறது.

தினத்தந்தி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்தல் மற்றும் திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாசில்தார் அலுவலகத்திலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை