தமிழக செய்திகள்

மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்து: நடிகர் கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு ரத்து

மகாபாரதம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 2017-ம் ஆண்டு சர்ச்சை கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தினத்தந்தி

இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி கமல்ஹாசன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவர் மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நிலுவையில் இருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில், இதுபோன்ற சர்ச்சைகள் எதிர்காலங்களில் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் மீது வள்ளியூர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை