தமிழக செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது; ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சரின் நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என எழுந்த சர்ச்சையை அடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதில், ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாகவோ, ஜெயலலிதா மரணம் தொடர்பாகவோ சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்