தமிழக செய்திகள்

பெரியார் சிலை குறித்த சர்சை பேச்சு: கனல் கண்ணன் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு

பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பெரியார் சிலை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ம் தேதியன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கனல் கண்ணனின் ஜாமின் மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது. 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?